காலையிலிருந்தே சோர்விலும் விரக்தியிலும் இங்கிலாந்து வீரர்கள்!

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், காலை முதலே, இங்கிலாந்து வீரர்கள் சோர்வுடன் விரக்தியுடனும் காட்சியளிக்கிறார்கள்.

நேற்று பிற்பகல் வரை, ஆட்டம் அவர்களின் பக்கம் இருந்தது. ஆனால், ரிஷப் பன்ட்டும், சுந்தரும் அவர்களின் சந்தோஷத்தை, ஈவிரக்கமில்லாமல் குழிதோண்டி புதைத்துவிட்டனர். அந்த வீழ்ச்சியிலிருந்து இங்கிலாந்து வீரர்களால் இன்னும் மீள முடியவில்லை.

ரிஷப் பன்ட் ஆட்டமிழந்தவுடன், சரி, இனி மற்றதை எளிதாக முடித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அக்ஸார் படேல் அவர்களை இந்தளவு சோதிப்பார் என்று இங்கிலாந்து வீரர்கள் கட்டாயம் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

சுந்தர் சதத்தை நெருங்கிவிட்ட நிலையில், அக்ஸார் படேல் அரைசதத்தை நெருங்கி வருகிறார்.

காலையில், போட்டி தொடங்கியதும் எந்த அணியும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பது வழக்கமாக இருக்கையில், இங்கிலாந்து வீரர்கள் அப்படியே எதிர்மாறாக காட்சியளிக்கிறார்கள். எதையோ, இழந்ததுபோல் அவர்களின் முகம் இருக்கிறது.