இங்கிலாந்தில் ஜூலை 4 முதல் பப்புகள் ஓட்டல்கள் திறக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி

ண்டன்

ங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் வர்த்தகப் பணிகளை மீண்டும் தொடங்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி அளித்துள்ளார்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில்  இங்கிலாந்து ஐந்தாம் இடத்தில் உள்ளது.  இதுவரை 3.05 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்தம் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  கொரோனா தாக்கம் காரணமாக இங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கு வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கால் இங்கிலாந்து நாட்டில் கடும் பொருளாதார தாக்கம் ஏற்பட்டுள்ளது.  கடந்த 300 வருடங்களில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வீழ்ச்சியில் நாடு தவித்து வருகிறது.  இதையொட்டி ஆளும்  கட்சியான கன்சர்வேடிவ் கட்சி ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அறிவித்து சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்குமாறு பிரதமரைக் கேட்டுக் கொண்டது.

அதற்கு இணங்க போரிஸ் ஜான்சன் பல பணிகளை வரும் ஜூலை 4 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க அனுமதிஅளித்துள்ளர்.  இது குறித்து அவர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.  அவர்,,”நாட்டில் அனைத்து சுற்றுலா மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது.  இதனால் ஓட்டல்கள், பப்புகள், திரையரங்குகள் ஜூலை 4 முதல் திறக்கப்படும்.

அதே வேளையில் குறைந்தது 1 மீட்டர் சமூக இடைவெளியை மக்கள் க்டைபிடிக்க வேண்டும். அனைவரும் முகக வசம் அணிய வேண்டும்.  மற்றவர்கள் வீடுகளில் அதிக நேரம் தங்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.  இந்த ஊரடங்கு விதிகள் தளர்வு மூலம் நமது நீண்ட தேசிய உறக்க நிலையில் இருந்து நாடு விழித்துக் கொண்டுள்ளது.” என அறிவித்துள்ளார்.

ஜூலை 4 முதல் வெளிப்புற உடற்பயிற்சி சாலைகள், விளையாட்டு திடல்கள், நூலகங்கள், சமூக விடுதிகள், சமுதாய கூடங்கள், முடி திருத்தகம் ஆகியவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது   ஆனால் இரவு விடுதிகள்  உட்புற விளையாட்டு அரங்கங்கள்,  உட்புற உடற்பயிற்சி சாலைகள், ஆகியவை இயங்காது.  கிரிக்கெட் போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன.