ண்டன்

ங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது.

உலகில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும்.  அந்நாட்டின் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார்.   அரசி எலிசபெத்துக்கு பாதிப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பிறகு அது போலித் தகவல் என அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாதிப்பு அடைந்ததால் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.  பாதிப்பு அதிகமானதால் அவர் கடந்த ஐந்தாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சோதனைக்காக அனுமதிக்கப் பட்டதாகக்  கூறப்பட்டது.  ஆனால் அவர் அடுத்த நாள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை சீராக உள்ளது.  அவருக்கு கொரோனா அறிகுறி அதிகரித்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவர் நல்ல மன உறுதியுடன் காணப்படுகிறார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.