ண்டன்

திய பற்றாக்குறை காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய  உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் பிரதமராகப் பதவி வகித்து வரும் போரிஸ் ஜான்சன் பெரிய குடும்பஸ்தர் ஆவார்.  இவருக்கு அறு குழந்தைகள் உள்ளன.  அந்த குழந்தைகளில் சிலர் இளைஞர்களாக இருந்த போதிலும் அவர்களுடைய செலவுகளையும் இவர்தான் கவனிக்க வேண்டி உள்ளது.  இவருடைய முன்னாள் மனைவி மரீனா லீவருக்கு விவாகரத்து தீர்ப்பின்படி மாதம் ஒரு தொகை அளிக்க வேண்டி உள்ளது

இவர் மாதம் ரூ. 2,75,000 பவுண்டு  வருமானமாகப் பெற்று வந்துள்ளார்.   இதைத் தவிர மாதம் இரு முறை மேடைப் பேச்சுகளில் கலந்து கொள்வார்.  அதற்கு 1,60,000 பவுண்டுகள் ஊதியம் கிடைக்கும்,   தற்போது இங்கிலாந்து பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சன் 1,50,402 பவுண்டுகள் மட்டுமே ஊதியமாகப் பெற்று வருகிறார்.

போரிஸ் முன்பு பெற்ற ஊதியத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  மேலும் அவர் தனது குடும்பத்தை நடத்த இந்த ஊதியம் போதவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே போரிஸ் ஜான்சன் ஊதிய பற்றாக்குறை காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.