இங்கிலாந்து இளவரசர் ஹாரி கனடா வந்தடைந்தார்

ட்டாவா

ங்கிலாந்து நாட்டு அரச குடும்பத்தில் இருந்து விலகிய  இளவரசர் ஹாரி கனடா நாட்டை வந்தடைந்தார்.

இங்கிலாந்து நாட்டுப் பட்டத்து இளவரசர் சார்லசின் மகன்களில் ஒருவரும்,  அரசி எலிசபெத் பேரனுமான இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் மார்கல் என்பவரை திருமணம் செய்தார்.   அரச குடும்பத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இருவரும் அரச குடும்ப பதவிகளில் இருந்து விலகி கனடாவில் வசிக்க முடிவு செய்தனர்.

 

இங்கிலாந்து அரசி எலிசபெத் தனது குடும்பத்துடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தார்.   அத்துடன் அரண்மனை சார்பில் இனி ஹாரி மற்றும் மேகன் மார்கெல் ஆகியோர் இளவரசர் இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் எனவும் அரச குடும்ப பதவியில்  நீடிக்க மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

 

அத்துடன் இனி மக்களின் வரிப்பணத்தை அவர்கள்  பயன்படுத்த மாட்டார்கள் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.   இதைத் தொடர்ந்து மேகன் மார்கெல் மட்டும்  தனது குழந்தையுடன் கனடாவுக்குச் சென்றார்.

நேற்று ஹாரி கனடா  விமான நிலையத்தில் வந்து இறங்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

கார்ட்டூன் கேலரி