ஒரே அரண்மனையில் வசித்த இங்கிலாந்து இளவரசர்கள் பிரிகின்றனர்

ண்டன்

ங்கிலாந்து இளவர்சர்களான வில்லியம் மற்றும் ஹாரி தனித்தனியே வசிக்க உள்ளனர்.

லண்டன் நகரில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் இங்கிலாந்து இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் ஒன்றாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.    சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட ஹாரியின் மனைவி மேகன் மார்க்கெல் கர்ப்பம் அடைந்துள்ளார்.   அவருக்கு எப்ரல் அல்லது மே மாதம்  குழந்தை  பிறக்க உள்ளது.

வில்லியம் மனைவி கேத் மிடில்டன் மற்றும் ஹாரியின் மனைவி மேகன் மார்க்கேல் இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப்போகவில்லை என சொல்லப்படுகிறது.     அது மட்டுமின்றி பட்டத்து இளவரசரும் இவர்கள் இருவரின் தந்தையுமான சார்லஸிடம் இருந்து மேலும் சில பொறுப்புக்கள் வழங்கப்பட உள்ளன.

எனவே இளவரசர்கள் இருவரும் தனித்தனியே பிரிய முடிவு செய்துள்ளனர்.     ஹாரி மற்றும் மேகன் ஆகியோர் பிராக்மோர் காட்டேஜ் அரண்மனைக்கு குடி புக உள்ளனர்.   இன்னும் சில வாரஙகளில் அதாவது மேகனுக்கு குழந்தை பிறக்கும் முன்னர் இந்த பிரிவு முறைப்படி நடக்க உள்ளதாக லண்டன் நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

எனவே இருவருக்கும் தனித்தனியே ஊழியர்கள் நியமனம் நடந்து வருகிறது.   இருவரும் பிரிந்த பின்னரும் அரச குடும்பத்தின் அறக்கட்டளை பணிகளை மட்டும் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.  இந்த அறக்கட்டளை மூலம் பல மன நலம் பாதிக்கப்பட்டவர்கள். முதியோர், ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.