விம்பிள்டன் போட்டி : வதந்திகளை பொய்யாக்கிய இங்கிலாந்து இளவரசிகள்

ண்டன்

ங்கிலாந்து அரச குடும்ப இளவரசிகள் மேகன் மார்கில் மற்றும் கேட் மிடில்டன் இருவரும் விம்பிள்டன் போட்டியை காண ஒன்றாக வந்தனர்.

இங்கிலாந்து நாட்டு இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மார்கிள் ஆவார். மற்றொரு இளவரசரான வில்லியம் மனைவியின் பெயர் கேட் மிடில்டன் ஆகும். இருவரும் ஒரே அரண்மனையில் வசித்து வந்தனர். சமீபத்தில் மேகன் மார்கிள் தனது முதல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

ஹாரி மற்றும் வில்லியம் ஒரே இல்லத்தில் வசித்து வந்த போதிலும் இடம் பற்றாக்குறை காரணமாக ஹாரி வேறு இல்லத்துக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதே நேரத்தில் மேகன் மற்றும் கேட் இடையே கடும் தகராறு நிலவுவதாகவும் அதனால் இளவரசர்கள் பிரிந்ததாகவும் வதந்திகள் வந்தன.

 

முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் செரினா வில்லையம்ஸும் மேகன் மார்கிளும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். அத்துடன் கேட் மிடில்டனும் விம்பிள்டன் போட்டிகளை விரும்பி பார்ப்பது வழக்கமாகும். கடந்த வாரம் இரு இளவரசிகளும் விம்பிள்டன் போட்டியை காண வந்தனர்.

இது பார்வையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் போட்டியை காண இரு இளவரசிகளும் ஒன்றாக வந்தனர். அத்துடன் அருகருகில் அமர்ந்து சிரித்து பேசியபடி இளவரசிகள் காணப்பட்டனர். இதன் மூலம் தங்களை பற்றிய வதந்திகளுக்கு இளவரசிகள் முடிவு கட்டி உள்ளனர்.

You may have missed