உலக கோப்பை ஹாக்கி: அர்ஜெண்டினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி!

உலக கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்து காலிறுதி சுற்றுகள் இன்று தொடங்கின.

hoacky

காலிறுதி சுற்றின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதின. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். 17வது நிமிடத்தில் அர்ஜெண்டின வீரர் கன்சாலோ பெய்லட் முதல் கோடி அடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் பாரி மிடில்டன் ஒரு கோல் அடித்து போட்டியை சமனிலை படுத்தினார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இதையடுத்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 45வது நிமிடத்தில் வில் கால்னன் ஒரு கோல் அடுத்தார். அதனை தொடர்ந்து 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் கன்சாலோ மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை சமநிலைக்கு கொண்டுவந்தார்.

இதற்கு பதிலடியாக, இங்கிலாந்தின் மற்றொரு வீரரான ஹாரி மார்டின் 49வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக இங்கிலாந்து அணி 3 – 2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து வீரர் லியாம் அன்செல் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.

You may have missed