பலாத்காரம் செய்த இங்கிலாந்து வாழ் இந்தியருக்கு 7 வருட சிறை தண்டனை

ண்டன்

லாத்கார குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இங்கிலாந்து வாழ் இந்தியர் ஒருவருக்கு 7 வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அஜய் ராணா என்னும் இந்தியர் இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் வசித்து வந்தார். நண்பர்களுடன் ஒரு விடுதியில் வசித்து வந்த அவர் கார் ஓட்டுனராக பணி புரிந்து வந்தார். அத்துடன் அவர் மாலை நேரக் கல்வியும் கற்று வந்தார். அவருக்கு 35 வயதாகிறது. அவர் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை என தன்னுடன் வசித்தவர்க்ளிடம் கூறி விட்டு வெளியேறி உள்ளார்.

அஜய் ராணா செல்லும் வழியில் ஒரு பெண் காலை 5 மணிக்கு தனியாக சென்றுக் கொண்டிருந்துள்ளார். தனது காரை நிறுத்தி அஜய் அந்த பெண்ணுக்கு லிஃப்ட் அளித்துள்ளார். முதலில் மறுத்த அந்தப் பெண் இவரது சாந்தமான முகத்தைக் கண்டு நம்பி ஏறிக் கொண்டார். சிறிது தூரம் சென்ற பிறகு காரை நிறுத்திய அஜய் அந்த பெண்ணை காரினுள் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்தப் பெண் அருகில் இருந்த தனது தோழி வீட்டுக்கு ஓடிச் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் காரின் எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தை தேடி சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இந்தியாவுக்கு சென்று விட்டதை அறிந்த காவல்துறையினர் அவர் மீது ஐரோப்பிய வாரண்ட் பிறப்பித்து இந்தியாவில் இருந்து வெளியேற்றுமாறு இந்திய அதிகாரிகளிடம் முறை இட்டனர்.

இந்நிலையில் அஜய் அங்கிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு சென்று விட்டார். அவரை அந்நாட்டு காவல்துறையினர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 அன்று கைது செய்தனர். அதன் பிறகு அவர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி இங்கிலாந்து அனுப்பப்பட்டார். அவருடைய ஹெட் ஃபோன் பஞ்சு மூலம் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டு அவருடைய பலாத்கார குற்றம் நிரூபிக்கப்பட்டது.

அதை ஒட்டி இங்கிலாந்து நீதி மன்றம் அஜய் ராணாவுக்கு 7 வருட சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன் அவர் வாழ்நாள் முழுவதும் அங்குள்ள பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் கையெழுத்து இட வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.