இறுதி டெஸ்ட்டின் முதல் நாளில் 4 விக்கெட்டுகளுக்கு இங்கிலாந்து 192 ரன்கள்!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இன்றைய போட்டியில் மொத்தம் 54.2 ஓவர்களே வீசப்பட்டன. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஸாக் கிராலே 66 ரன்களை அடித்தார்.

டாம் சிப்லே 44 ரன்களையும், ஜோ டென்லி 27 ரன்களையும் அடித்தனர். ஜோ ரூட் 25 ரன்களையும், போப் 22 ரன்களையும் அடித்து களத்தில் உள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களுக்கு ஆவுட்டானார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ஃபிளாண்டர், ஹென்ட்ரிக்ஸ், நார்ட்ஜே மற்றும் பேட்டர்ஸன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றால் தொடர் சமன் ஆகும். மாறாக, ஆட்டம் டிரா ஆனால், இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றும்.