4வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எட்டிய இங்கிலாந்து!

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

இரண்டாம் நாளில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, தேநீர் இடைவேளை வரை 11 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் யாரும் சதமடிக்கவில்லை என்றாலும், சாக் கிராலி, ஜோ ரூட், போப் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

கடைசி கட்டத்தில் அந்த அணியின் பந்துவீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் கணிசமான பங்க‍ை அளித்து, ரன்கள் அதிகரிக்க உதவினர்.

இதனால் அந்த அணி 400 ரன்கள் என்ற சற்று வலுவான எண்ணிக்கையை எட்ட முடிந்தது. ‍தென்னாப்பிரிக்கா தரப்பில் ஆன்ரிக் நார்ட்ஜே 5 விக்கெட்டுகளும், டேன் பீட்டர்சன் மற்றும் ஃபிளாண்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஹென்ரிக்ஸ் 1 விக்கெட் எடுத்தார்.