ஆஸ்திரேலியாவுக்கு 231 ரன்களை இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 9 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஒருவரும் அரைசதம் அடிக்கவில்லை. அதேசமயம், 150 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து நிலையில், அதன்பிறகு சுதாரித்து, 231 ரன்கள் வரை அந்த அணி சென்றது.

அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் 42 ரன்கள் அடித்தார். அடுத்ததாக ஜோ ரூட் 39 ரன்களையும், டாம் குர்ரன் 37 ரன்களும், அடில் ரஷித் 35 ரன்களும் அடித்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸம்பா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஹேசில்வுட், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

You may have missed