அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் – இங்கிலாந்து அணி அறிவிப்பு

சவுத்தாம்டன்: அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பிடித்துள்ளார். தற்போது அயர்லாந்து அணி, இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் ஒருநாள் போட்டி, இம்மாதம் 30ம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. அடுத்தடுத்தப் போட்டிகள் ஆகஸ்ட் 1 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்தொடரில் பங்கேற்பதற்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், இடது க‍ை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கான கேப்டனாக இயன் மார்கனும், துணைக் கேப்டனாக மொயின் அலியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி