திணறும் இங்கிலாந்து – இலக்கை எட்டுமா?

லார்ட்ஸ்: 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், 242 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் இங்கிலாந்து, நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

அந்த அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மென்களான ஜேஸன் ராய் 17 ரன்களுக்கும், பேர்ஸ்டோ 36 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

ஜோரூட் 7 ரன்களுக்கும், மோர்கன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தற்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் ஆடி வருகின்றனர்.

நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, கிராண்ட்ஹோம், ஃபெர்குஸன் மற்றும் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.