Random image

இந்தியாவில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் – இங்கிலாந்து அணி அறிவிப்பு!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதே 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களைப் பொறுக்கி எடுத்து, வலிமையான இந்தியாவுக்கு எதிராக, ஒரு வலுவான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை தொடரில் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணி: ஜோ ரூட், ஜோஃப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, ஜேம்ஸ் ஆன்டர்ஸன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ், ஓலே ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.