இங்கிலாந்து: முத்தரப்பு போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணி

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ஏ அணி விக்கெட் இழப்பிற்கு 265ரன்கள் எடுத்து கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவின் ஏ அணி, இங்கிலாந்தின் லயன்ஸ் அணி, வெஸ்ட் இண்டீசின் ஏ அணிகளிடையேயான முத்தரப்பு போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வந்தது.
ingland
லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இறுதி சுற்றுக்கு இந்தியாவின் ஏ அணியும், இங்கிலாந்தின் லயன்ஸ் அணியும் முன்னேறின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை எடுத்தது. இந்த அணியின் சாம் ஹெய்ன் 122 பந்துகளுக்கு 108 ரன்களை எடுத்து அணிக்கு உதவினார்.

இதனை தொடர்ந்து 265 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டினர். இந்தியாவின் ரிஷப் பண்ட் 62 பந்துகளுக்கு அரைசதம் கடந்து 64 ரன்களை எடுத்தார். கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களையும், அகர்வால் 40 ரன்களையும் எடுத்தனர்.

பந்து வீச்சாளர்களான தீபக் சாகர் மற்றும் கலீல் அஹமத் தலா 3 விக்கெட்டுகளையும், தாகூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்