ஃபிபா உலக கோப்பையை கைப்பற்றுமா இங்கிலாந்து ?

ஃபிபா உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றும் என்று அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய முதலீட்டு வங்கி கணித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு அமெரிக்காவை சேர்ந்த கோல்ட்மேன் சச்ஸ் என்ற வங்கி முதலீடு செய்து வருகிறது. விருவிருப்பான போட்டிகளுக்கு இடையில் உலக கோப்பையின் இறுதி போட்டியில் எந்த அணிகள் மோதும் என்றும், எந்த நாடு வெற்றிப்பெறும் என்றும் கோல்ட்மேன் சச்ஸ் கணித்துள்ளது.
orld-cup-prediction
கடந்த ஞாயிற்றுக்கிழமை 6-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பனாமாவை வென்றது. இதேபோல் 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வெற்றிக்கொண்டது. இங்கிலாந்தின் தொடர் வெற்றிகள் மூலம் 16புள்ளிகளை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்த கணிப்பை பெரும்பாலான ரசிகர்கள் மறுத்துள்ளனர். ஏனெனில் 1966ம் ஆண்டு மட்டுமே இங்கிலாந்து உலக கோப்பையை வென்றுள்ளது. 1990ம் ஆண்டு அறையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று முன்பு நடைபெற்ற உலக கோப்பை குறித்து கோல்ட்மேன் சச்ஸ் கணித்தது ஏமாற்றத்தில் முடிந்தது. இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணி பனாமா மற்றும் துனிசியாவுடன் மோதும் என கோல்ட்மேன் சச்ஸ் நிறுவனம் கணித்தது. ஆனால் இவற்றை பொய்யாக்கி இறுதி சுற்றில் போலந்தை கொலம்பியா வென்றது.
fifa
பிரேசில் அண்இ இறுதி சுற்றுக்கு முன்னேறினால் மிகவும் வலிமையான அணியான ஜெர்மனியை வெற்றிப்பெற வேண்டி இருக்கும் இருக்கும் என கோல்ட்மேன் சச்ஸ் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணி இறுதி சுற்றுக்கு முன்னேறினால், மெக்சிகோ மற்றும் ஸ்பெயினை வெற்றிப்பெற வேண்டும் என கோல்ட்மேன் சச்ஸ் கணித்துள்ளது. மற்றுமொரு கணிப்பில் பிரேசில் அணி இங்கிலாந்தை தோற்கடிக்கும் என்று கோல்ட்மேன் சச்ஸ் நிறுவனம் கணித்துள்ளது

You may have missed