கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட்டில் 191 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.

முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுத்த இங்கிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸில் 248 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்க அணிக்கு, 466 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் மட்டுமே அதிகபட்சமாக அரைசதம் அடித்தார்.

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய தென்னாப்பிரிக்க அணியில், வான் டெர் டுஸென் 98 சளைக்காமல் போராடி, 98 ரன்களை எடுத்து அவுட்டானார்.

டி காக் 39 ரன்களும், டூ ப்ளெசிஸ் 35 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் யாரும் சோபிக்கவில்லை. இறுதியில் 274 ரன்களுக்கெல்லாம் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நான்காம் நாளிலேயே போட்டி முடிந்துவிட்டது.

இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இங்கிலாந்து அணி.