மூன்றாவது டெஸ்ட் – 269 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி!

லண்டன்: விண்டீஸ் அணிக்கெதிரான இறுதி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 269 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது இங்கிலாந்து.

வெற்றிக்கு 399 ரன்கள் தேவை என்ற நிலையில், வெறும் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துவிட்டது விண்டீஸ் அணி.

அந்த அணியின் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 31 ரன்களை அடித்தார். பிளாக்வுட் 23 ரன்களையும், ப்ரூக்ஸ் 22 ரன்களையும் அடித்தனர். மற்ற பேட்ஸ்மென்கள் அனைவரும் எளிதாக சரணடைந்துவிட்டனர்.

இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஒரு நெருக்கடியான சூழலில், இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்ட விண்டீஸ் அணி, அங்கு டெஸ்ட் தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் டெஸ்ட்டில் மட்டுமே ஆக்ரோஷம் காட்டிய அந்த அணி, அடுத்த 2 போட்டிகளிலும் எளிதாக சரணடைந்துவிட்டது.

 

கார்ட்டூன் கேலரி