முதல் டெஸ்ட் – 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து!

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, 3 விக்க‍ெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

கிறிஸ்வோக்ஸ் எடுத்த 84 ரன்களும், ஜோஸ் பட்லர் அடித்த 75 ரன்களும் இங்கிலாந்து அணியை, வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.

முதல் இன்னிங்ஸில்  219 ரன்கள் மட்டுமே அடித்த இங்கிலாந்து அணி, இரண்டாம் இன்னிங்ஸில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் எழுச்சிபெற்றது.

பாகிஸ்தான் அணியை இரண்டாம் இன்னிங்ஸில் 169 ரன்களுக்கு கட்டுப்படுத்தியதுடன், அந்த அணி நிர்ணயித்த 277 ரன்கள் இலக்க‍ை 7 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.

பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்ட்டை வென்றுள்ளதன் மூலம், மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி