காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 135 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து எடுத்ததோ 421 ரன்கள். அதற்கு பதிலடியாக ஆடிய இலங்கை, இரண்டாவது இன்னிங்ஸில் 359 ரன்களை அடித்து இங்கிலாந்திற்கு 76 ரன்களை மட்டுமே இலக்கு நிர்ணயித்தது.

இலங்கை அணியின் துவக்க வீரர் குசால் பெரரா 62 ரன்களும், லஹிரு திருமன்னே 111 ரன்களும் அடித்து சிறப்பாக துவக்கம் கொடுத்தனர். ஆனால், பிற பேட்ஸ்மென்களில் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டுமே 71 ரன்கள் அடிக்க, மற்றவர்கள் சோபிக்க தவறினர்.

இங்கிலாந்து சார்பில், ஜாக் லீச் 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, டாம் பெஸ் 3 விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், எளிய இலக்க‍ை விரட்டிய இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை இழந்து, 76 ரன்களை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.