ஒரு நாள் கிரிக்கெட் : இரண்டாம் போட்டி : இந்தியாவை வென்ற இங்கிலாந்து

ண்டன்

ந்தியா – இலங்கை ஒரு நாள் போட்டியின் இரண்டாம் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்று போட்டியை 1-1 என சமன் செய்துள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து – இந்தியாவின்  ஒரு நாள் போட்டியின் இரண்டாம் ஆட்டம் நேற்று நடந்தது.    இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கியது.   ஏற்கனவே முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் இரு அணிகளும் சுறு சுறுப்பாக விளையாடின.

முதல் இன்னிங்ஸ் முடிவில் 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 322 ரன்கள் எடுத்திருந்தது.   அடுத்து இறங்கிய இந்திய அணி தனது இலக்கான 323  ரன்களை எடுக்க மிகவும் பாடுபட்டது.   இந்திய அணி தனது முதல் விக்கட்டை 49 ரன்களுக்கு இழந்தது.   அதன் பிறகு மளமளவென விக்கட் சரியத் தொடங்கியது.

கோஹ்லி 45 ரன்களும் சுரேஷ் ரெயினா 46 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.   ஆட்ட முடிவில் இந்திய அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.   இதை ஒட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  இதன் மூலம் 3 நாட்கள் நடக்க உள்ள ஒரு நாள் போட்டியை இங்கிலாந்து அணி தற்போது 1-1 என்ற வெற்றிக் கணக்கில் சமன் செய்துள்ளது.