இங்கிலாந்து முன்னாள் கால்பந்து பிரபலம் ஜாக் சார்லடன் மரணம்!

லண்டன்: உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற அந்நாட்டின் முன்னாள் கால்பந்து பிரபலம் ஜாக் சார்ல்டன் தனது 85வது வயதில் காலமானார்.

இங்கிலாந்து அணிக்காக இவர் மொத்தம் 35 சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார். கடந்த 1966ம் ஆண்டு, அந்த அணி ‘பிஃபா’ கால்பந்து உலகக்கோப்பையை வென்றபோது, இங்கிலாந்து அணிக்காக அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்றார்.

அந்த உலகக்கோப்பை இறுதியில், ஜெர்மனியை 4-2 என்ற கோல்கணக்கில் வென்று, முதன்முறை கோப்பை வென்றது இங்கிலாந்து.

சிறந்த தடுப்பாட்டக்காரர் என்று பெயர்பெற்ற சார்ல்டன், கடந்த 1973ம் ஆண்டு ஓய்வுபெற்றார். பின்னர், பல கிளப் அணிகளின் நிர்வாகத்தில் பங்கேற்றார்.

மேலும், இங்கிலாந்தின் கிளப் அணியான லீட்ஸ் யுனைடெட் அணிக்காக மொத்தம் 23 ஆண்டுகளாக 773 போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலக் குறைவால் இவர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.