பணம் பத்தும் பேச வைக்கும்! – ‍ஐபிஎல் குறித்த இங்கிலாந்து வீரரின் கருத்தைக் கேளுங்களேன்..!

லண்டன்: ஐபிஎல் தொடரால் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ச்சியடைந்துள்ளது என்று ஒருபடி மேலேபோய் புகழ்ந்துள்ளார் அந்த அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.

அவர் கூறியுள்ளதாவது, “ஐபிஎல் தொடரால் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்துள்ளது என்று கூறினால் அதில் சந்தேகமேயில்லை. அதில் விளையாடியே தீர வேண்டும் என்பதே என் ஆசை. ஐபிஎல் கிரிக்கெட்தான் உலகின் சிறந்த தொடர். அதாவது உலகக்கோப்பை தொடர்கள் நீங்கலாக.

ஐபிஎல் தொடரில் உள்ள சில சவால்கள் பிரமாதமானவை. உதாரணமாக, பெங்களூரு அணியின் கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல் ஆகியோர் டேல் ஸ்டெய்ன், ஜஸ்பிரித் பும்ராவை, மலிங்காவை எதிர்கொள்ளும் சுவாரசியம். வளர்ச்சியுறும் ஒரு குழந்தையாக நாம் அத்தகைய கிரிக்கெட்டைத்தான் விளையாட விரும்புவோம். கோலி, டிவில்லியர்ஸ் சேர்ந்து ஆடுவதைப் பார்ப்பது எத்தனை சுவாரசியம்!

உண்மையில் நாங்களெல்லாம் ஐபிஎல் ஆடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர் கெவின் பீட்டன்சன். வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் எவ்வளவு முக்கியம் என்பதை பீட்டர்சன் உணர்ந்திருக்கிறார்” என்று கூடுதலாகவே எ‍‍ஃபெக்ட் கொடுத்துள்ளார் ஜோஸ் பட்லர்.

எல்லாம் பணம் படுத்தும் பாடு! என்று கிரிக்கெட் உலகில் நக்கலாக கண்ணடிக்கின்றனர்!