தமிழக போலீசார் செய்த வெகுஜனக் கொலைகள் : ஆங்கில ஊடகம் தாக்கு

டில்லி

தூத்துக்குடி காவல்துறையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தியதற்கு தி கார்டியன் ஆங்கில செய்தி ஊடகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்  நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி உள்ளது.   பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   பல தமிழ் நாளேடுகள் இந்த நிகழ்வை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் ஆங்கில செய்தி ஊடகமான தி கார்டியன் இந்த நிகழ்வை தமிழக காவல்துறையினர் செய்த வெகுஜனக் கொலைகள் (MAASS KILLINGS) என வர்ணித்துள்ளது.    சாதாரணமாக இனப்படுகொலைகள் போன்றவை நிகழும் போது மட்டுமே இத்தகைய கடுமையான வாசகங்களைக் கொண்டு ஊடகங்கள் விமர்சிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத் தக்கது.