போனி கபூரின் லட்சிய தமிழ் படமான “நேர்கொண்ட பார்வை” ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கப்பூர் திரையரங்குகளில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது.

அஜித் , ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ள, இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.

இப்படத்தை திருட்டு தனமாக வெளியிட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இப்போதே தயாராகிவிட்டது. நேற்று, தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டர் பக்கத்தில், ஏற்கனவே அறிவித்த தேதிக்கு முன்னதாகவே 8ம் தேதி இரவு 8 மணிக்கு இப்படத்தை காணலாம் என்று அதிரடியாக அறித்துள்ளது.

இதனால் சட்டவிரோதமாக நேர்கொண்ட பார்வை படத்தை இணையதளங்களில் பதிவிடுவதை தடை செய்யக் கோரி தயாரிப்பாளர் போனி கபூர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி நேர்கொண்ட பார்வை படத்தை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க இணைய சேவைநிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளத்தில் நேர்கொண்ட பார்வை படம் வெளியிடுவது தடுக்கப்படும் என்று தெரிகிறது.