நாங்கள் வாழத் தேவையான இசையை தந்துவிட்டீர்கள் : கமல்ஹாசன்

ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் எனியோ மோரிகோனே நேற்று (ஜூலை 6) காலை ரோமில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91

அவருடைய மறைவு உலக அளவில் உள்ள அவருடைய ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனியோ மறைவு குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்

“குரு எனியோ மோரிகோனே. நாங்கள் உங்கள் இழப்பை உணரமாட்டோம் ஐயா. நாங்கள் கேட்கத் தேவையான இசையை, வாழத் தேவையான இசையை, இன்னும் மேம்படுத்தத் தேவையான இசையை, நீங்கள் கொடுத்ததை மிஞ்சிப் போகவும் தேவையான இசையை எங்களுக்குத் தந்துவிட்டீர்கள். நன்றி மற்றும் வணக்கங்கள்” என்று தெரிவித்துள்ளார்.