போதும்டா சாமி இந்த பொம்பள பொறப்பு.. சின்மய் சீற்றம்..

சில தினங்களுக்கு முன் அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில் சசிகலா என்ற பெண்ணை இருவர் ஆபாசபடம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததால் அப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி பாடகி சின்மய், ‘போறும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்கு ரோம்ன்னு தோணுது’ என டிவிட்டரில் வேதனையையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தி சசிகலாவுக்கு நீதி வழங்க கேட்டிருக்கிறார்