ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணையம்

 

                                     அருணா ஜகதீசன்

சென்னை

ய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பகுதியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கெடுவதாகவும், மக்களுக்கு புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகாலமாக குற்றம்சாட்டி வருவதோடு, ஆலையை மூட வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நூறு நாள் போராட்டத்தை அறிவித்த மக்கள், நூறாவது நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.

அப்போது கலவரம் வெடித்தது. காவல்துறையினர் தடியடி, கண்ணீர் புகை வீச்சு உள்ளிட்டவற்றை நடத்தினர். பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பதினோரு பேர் பலியானார்கள். இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.