சென்னை:

சென்னையில் இயக்கப்பட்டு வரும்,  மெட்ரோ ரயிலில் பயணிகள் வரவை அதிகரிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்ட வரும் நிலையில், ரயில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக,  மொபைல்ஆப் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் மூலம் தினசரி 1லட்சம் பேர் பயணம் செய்வதாக கூறப்படுகிறது. தற்போது, விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், பரங்கிமலை-சென்ட்ரல் வரை 2வது வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 1லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், இணைப்பு வாகன சேவை, இணைய வசதி என பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது.  இந்த நிலையில் ரயில் பயணி களின் பொழுதுபோக்கிற்காக,  பொழுதுபோக்கு அம்சங்களுடன் புதிய மொபைல் செயலி (mobile app) வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்த பொழுதுபோக்கு செயலியில், பாடல்கள், திரைப்படங்கள், நாடகத் தொடா்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என்றும், இந்த வசதி அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய மெட்ரோ ரயில் நிர்வாகம், இந்த மொபைல் ஆப், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 4 மொழிகளில்  இருக்கும் என்றும், தற்போது ஒரு மெட்ரோ ரயிலில் சோதனை முறையில், முழுமையாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், விரைவில் இயக்கப்படும், 2 ரயில்களிலும்  இந்த புதிய செயலியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் பயணிகள் தங்களின் 45 நிமிஷ பயணத்தில் பாடல்கள், திரைப்படங்கள், தொடா்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தங்களது போன் இலவசமாக பார்த்து ரசிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.