கேளிக்கை வரி: கேரளாவை போல தமிழகமும் ரத்து செய்யவேண்டும்! ஸ்டாலின்

சென்னை,

மிழகத்தில் கேளிக்கை வரி அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் தியேட்டர்களை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவை போல தமிழகமும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இதுதொடர்பாக இன்று சட்டசபை விவாதங்களில் பங்குகொண்டு ஸ்டாலின் பேசியதாவது,

ஜிஎஸ்டியுடன் சேர்த்து கேளிக்கை வரி வசூலிப்பதால் சினிமா தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கேளிக்கை வரியால் தமிழ் திரைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா தொழில் நலிவடைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்றும்,

ஏற்கனவே நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றோர் கேளிக்கை வரி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் என்றார்.

மேலும், கேரள அரசை போன்று தமிழக அரசும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  தமிழ் பெயர் கொண்ட படங்களுக்கு, திமுக ஆட்சியில் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டது. சினிமா துறையை நம்பி ஆயிரகணக்கானோர் உள்ளதால், மாநில அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.