எந்திரன் வழக்கு: இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்!

சென்னை:

ந்திரன் படம் தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை  ஒத்தி வைத்தது.

பிரபல வெற்றிப்பட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில்ல் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் திரைப்படம் 2010-ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்றது.

இந்த படத்தின் கதை தன்னுடையது என, ஆருர் தமிழ்நாடன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், தனது அனுமதி இல்லாமல் எந்திரன் படம் எடுத்ததால், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சுந்தர் முன்பு நடைப்பெற்றது. அப்போது சாட்சி விசாரணைக்கு இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகவில்லை. மேலும், படப்பிடிப்பு வேலை காரணமாக இயக்குநர் ஷங்கர் வெளியூர் சென்றிருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென்று அவர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவினை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சி விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என கண்டித்தவர், , இயக்குனர் ஷங்கருக்கு 10000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த அபராத தொகையை புளூ கிராஸ் அமைப்பிடம் செலுத்த வேண்டும் என்றவர், வழக்கின் அடுத்த  விசாரணையை செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.