ஆந்திரா அரசு பதவிக்கு நிர்மலா சீத்தாராமன் கணவர் முழுக்கு

ஐதராபாத்:

ஆந்திரா அரசின் தகவல் தொடர்பு ஆலோசகராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்ட இவரது பதவி மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பாஜக கூட்டணியை தெலுங்கு தேசம் கட்சி முறித்துக்கொண்டது. சந்திரபாபு நாயுடு பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

தகவல் தொடர்பு அதிகாரியாக இருந்த பரகல பிரபாகரன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பரகல பிரபாகரின் பதவிக்காலம் ஜூலை 4-ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.