ஒரு ஆண்டில் 2 முறை நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்….மத்திய அரசு

டில்லி:

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் 2019ம் ஆண்டு முதல் ஒரு ஆண்டில் இரு முறை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘‘மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒரு ஆண்டில் 2 முறை நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் 2019ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது’’ என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திரா குஸ்வாகா லோக்சபாவில் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘மருத்துவ கல்விக்கான நீட், பொறியியல் கல்விக்கான ஜேஇஇ ஆகிய நுழைவுத் தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமையை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் ஆன்லைனில் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்.

மாணவர்கள் தங்களது திறனை கொண்டு வர போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும். மாவட்டம் அளவிலான தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை தான் முடிவு செய்யும்’’ என்றார்.

தேசிய தேர்வு வாரியம் தன்னாட்சி அந்தஸ்து கொண்டதாக இருக்கும். தேர்வுகளை நடத்த ஒரு முறை மானியமாக மத்திய அரசு ரூ. 25 கோடி வழங்குகிறது. அதன் பின்னர் அந்த அமைப்பு சுய நிதி ஆதாயம் மூலம் செயல்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: engineering jee courses likely to be held twice a year from 2019, Entrance exams for medical neet, ஒரு ஆண்டில் 2 முறை நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்....மத்திய அரசு
-=-