உத்தரபிரதேசம்:

த்தரபிரதேச மாநில மின் நிறுவனமான டிஎச்எஃப், கடந்த மார்ச் 2017 மற்றும் டிசம்பர் 2018-ஆம் ஆண்டுக்க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சட்டவிரோதமாக இபிஎஃப்-ல் முதலீடு செய்துள்ளது.

இதுகுறித்து திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (டி.எச்.எஃப்.எல்) என்று அதிகாரிகள் தெரிவிக்கையில், அரசுக்கு சொந்தமான மின் நிறுவனமான உத்தரப்பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (யுபிபிசிஎல்) நிறுவனத்தில் 4,100 கோடிக்கு மேற்பட்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) முதலீட்டில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுள்ளது குறித்து விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனம் மேற் கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை மோசடி மற்றும் மோசடி குற்றங்களுக்க்காக, குப்தா மற்றும் திவேதி ஆகியோரை 2019 நவம்பரில் உத்திர பிரதேச காவல் துறையினர் கைது செய்து எஃப்.ஐ.ஆர் பதவு செய்திருந்தனர்.

ஊழியர்களுக்கு தனிப்பட்ட மற்றும் பயிற்சி அளிக்கும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த, உத்திர பிரதேச அரசு அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பின்னர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியது.

டி.எச்.எஃப்.எல் நிறுவனம் மார்ச் 2017 முதல் டிசம்பர் 2018 வரை ஈ.பி.எஃப்-ல் சட்டவிரோத முதலீடு செய்துள்ளதாக எழுந்த புகார் வழக்கை ஏற்கனவே அமலாக்க துறை விசாரித்து வருகிறது.

சர்ச்சைக்குரிய மும்பையைச் சேர்ந்த டி.எச்.எஃப்.எல் நிறுவனத்தில் இரண்டு வருட காலப்பகுதியில் யுபிபிசிஎல் ஊழியர்களின் நிதியில் முதலீடு செய்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்திர பிரதேச அரசு உத்தரவிட்டது.

பின்னர், டி.எச்.எஃப்.எல் நிறுவனம் முறைகேடுகள் அனைத்து செய்திகளாக வெளியே வர தொடங்கியது. இந்திய ரிசர்வ் வங்கி வீட்டுவசதி நிதி நிறுவனத்திற்கு எதிராக திவால் நடவடிக்கைகளைத் தொடங்கியது. மற்றொரு வழக்கில், டி.எச்.எஃப்.எல் இன் முன்னாள் விளம்பரதாரரான கபில் வாதவன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்த குண்டர்கள் மற்றும் நம்பகமான தாவூத் உதவியாளர் இக்பால் மிர்ச்சியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலியான கணக்குகளைப் பயன்படுத்தி 12 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி நடந்துள்ளதை அமலாக துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஷெல் நிறுவனங்களில், மிர்ச்சி 3,200 கோடி ரூபாய் மேல் மோசடி செய்ய, வாதவனை பயன்படுத்தியுள்ளதாக அமலாக்க துறை குற்றம் சாட்டியுள்ளது.

டி.எச்.எஃப்.எல் பல நிதி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனை பெற்றுள்ளது. இதன் கடன்களில் 40 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. டிஹெச்எஃப்எல் 12,773 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதை அமலாக்க துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கேபிஎம்ஜி தடயவியல் தணிக்கை அறிக்கையின்படி, 20 ஆயிரம் கோடி ரூபாய் மோடி செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்தது..

டி.எச்.எஃப்.எல் இன் கீழ் ஐந்து ஷெல் நிறுவனங்களின் நிதி ஆவணங்களை அமலாக்க துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து இந்த நிறுவனங்களிடம் அதிகாரிகளிடமும் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனமான சன்பிளிங்கின் கணக்குகள் அடங்கிய ஆவணங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் மிர்ச்சியின் மூன்று வொர்லி சார்ந்த சொத்துக்களை வாங்கியுள்ளது. சன்பிளிங்க் வாதவனின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது, மேலும் டிஹெச்எஃப்எல்லின் நிர்வாகமற்ற இயக்குநரான தீரஜ் வாதவனின் பெயரும் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்தது.

சட்டவிரோத வழிமுறைகளால் கடன்களைப் பெற்ற ஐந்து ஷெல் நிறுவனங்கள் மூலம் டி.எச்.எஃப்.எல், 2,186 கோடி ரூபாயை பெற்றதாகவும், இந்த பணத்தின் ஒரு பகுதி 2010-ஆம் ஆண்டில் மூன்று வொர்லி நிறுவனம் சார்ந்த சொத்துகளுக்ககு மிர்சி பணம் செலுத்தியுள்ளதாகவும் அமலாக்க துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.