மோடி – அத்வானி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீது மீண்டும் விசாரணை துவங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,   இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் தந்திர அரசியல் இருப்பதாக லாலு பிரசாத் யாதவ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

“சி.பி.ஐ. என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இயங்குகிறது.  அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் நின்று அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை உயிர்ப்பிக்க சிபிஐ கோரியது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

லாலு

பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு அடுத்த குடியரசு தலைவராக அத்வானி வரலாம் என்று செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், மோடியின் தந்திரமாக காய் நகர்த்தி, அத்வானியை சிக்கலில் மாட்டிவிட்டுள்ளார்.

அவரது உத்தரவுப்படியே சிபிஐ நடந்துகொண்டுள்ளது.  அரசு என்ன விரும்புகிறதோ அதைச் செய்வதுதானே சிபிஐ வேலை.

தனக்கு எதிரி யார் என்றாலும் சரி அவரை எதிர்கொள்ள அபாயகரமான அரசியலில் ஈடுபடுவதில் பாஜகவும் மற்ற அரசியல் கட்சிகளும் தயக்கம் காட்டுவதே இல்லை” என்று லாலு தெரிவித்தார்.

மேலும், “அடல் பிஹாரி வாஜ்பாய் ஏன் உடல் நலமின்றிப் போனார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.