அபிநந்தன் பெயரை கூறி எடப்பாடி பிரசாரம்: தேர்தல் ஆணையத்தில் புகார்…

சென்னை:

ர்மபுரி தொகுதியில்  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  ஐஏஎப் விங் கமாண்டர் அபிநந்தன் பெயரை கூறி எடப்பாடி பிரசாரம் செய்தார். இது தேர்தல் விதி மீறிய செயல் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

தர்மபுரியில், அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் முடிந்ததும், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறிய நிலையில், பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர் அபிநந்தன் குறித்தும் பேசினார்.

அபிநந்தன் குறித்து பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி