இடைத்தேர்தலில் வெற்றி: ஈபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு

சென்னை:

ட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 இடங்களை திமுகவும், 9 இடங்களை அ.தி.மு.க.வும் கைப்பற்றியது. இதன் காரணமாக அதிமுக தற்காலிகமாக பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், இன்று அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்றவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் பதவியேற்றனர்.. சபாநாயகர் தனபால் எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

கார்ட்டூன் கேலரி