சென்னை:  மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், இன்று திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆய்வு செய்தனர்.

மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் பீனிக்ஸ் பறவை போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை வரும் 27ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விழா வரும்  27-ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில்நடைபெற உள்ளது. விழாவிற்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று  ஜெயலலிதா நினைவிடத்தின் இறுதிகட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  ஆய்வு மேற்கொண்டனர்.