இனி வேலைக்குத் திறமை போதும் ! பட்டம் தேவையில்லை !!: எங்கே தெரியுமா?
இனி வேலைக்குத் திறமை போதும் ! பட்டம் தேவையில்லை !!:

இங்கிலாந்தின் மிகப்பெரிய பட்டதாரி தேர்வாளர்களான எர்னஸ்ட் & யங் என்ற வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனம், அதன் நுழைவு வரையறைகளிலிருந்து “பட்டம்(degree) பிரிவை நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஏனெனில் பல்கலைக்கழகத்தில் வெற்றி பெறுவது பிற்காலத்தில் வாழ்க்கையில் சாதனைப் படைப்பதுடன் தொடர்புடையதாக இருக்க எந்தவொரு “ஆதாரமும்” இல்லையென அந்நிறுவனம் கூறுகிறது.

இந்த அபூர்வமான நடவடிக்கையில், கணக்குப்பதிவியல் நிறுவனம், திறமைசாலிகளின் பின்னணியை பொருட்படுத்தாமல் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளது.

மேகி ஸ்டில்வெல், எர்னஸ்ட் & யங் (EY) நிறுவனத்தின் திறமைக்கான நிர்வாகப் பங்குதாரர், விண்ணப்பதாரர்களின் ஆற்றலை ஆன்லைன் தேர்வுகள்மூலம் நிறுவனம் கணிக்கும் என்றார்.

“கல்வித் தகுதிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு விண்ணப்பதாரர்களை முழுதாக மதிப்பிடும் போது ஒரு முக்கியமான காரணியாகக் கருதப்படும், ஆனால் உள்ளே நுழைவதற்கு அது ஒரு தடையாக இனியும் இருக்காது,” என்று அவர் கூறினார்.

“நாங்கள் 400 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளைக் கல்வி செயல்திறன் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கும்போது ஆட்சேர்ப்பு முறை அணுகுமுறையில் மிகவும் வலுவற்றது என்று கண்டறியப்பட்டது.

“இது உயர் கல்வியில் கிடைத்த மதிப்பெண்ணிற்கும், பின்னர் எதிர்காலத்தில் பணியில் கிடைக்கும் வெற்றிக்கும் சம்பந்தம் உள்ளதென முடிவுக்கு வர எந்த ஆதாரமும் இல்லை.”

இந்த நிறுவனம் 200 பட்டதாரி-அளவிலான வேலைகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி, பிரிட்டனில் பட்டதாரிகளை வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தத் தணிக்கை நிறுவனம், மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால், ஒரு சில காரணங்களால் பள்ளியில் குறைவாகச் செயலாற்றும் மாணவர்கள், பின்தங்கிய பின்னணியில் இருக்கும் திறமைசாலிகள், ஆகியோரை முதலாளிகள் இழக்கக்கூடும் என்று நம்புகிறார்கள்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், புத்திசாலியான, பின்தங்கிய இளைஞர்களைவிட 35% அதிகமாகக் கல்வியில் தேர்ந்தவர்களாக இல்லையென்றாலும் பணக்கார குழந்தைகள் அதிக வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.