ஈரோடு கலெக்டர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிப்பு!

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறி இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ராசாமணி, சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் சீதாலட்சுமி, காரைக்கால் மாவட்ட ஆட்சி தலைவர் அர்ஜூன் சர்மா உள்ளிட்டோரும் கொரோனா தொற்றால பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.