ஈரோடு டிஎஸ்பி பணியிடை நீக்கம்!

சென்னை:

ரோடு நகர் டிஎஸ்பி சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணை கைதி மரணமடைந்தது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013ம்ஆண்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கைதி, போலீசாரின் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

தற்போது ஈரோடிட்டில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் சுரேஷ், ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றியபோது விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் அவர்மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து  டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். சுரேஷ் ஓய்வு பெற 3 நாட்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.