சென்னை மருத்துவமனையில் தப்பிய கொரோனா நோயாளி: கூவம் ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு

சென்னை: சென்னையில் மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி, கூவம் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் கொரோனா மிகவும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

இதனால் அங்கு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 30 வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 65 வயது கொரோனா நோயாளி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தப்பியோடி விட்டார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் சென்னை நேப்பியர் பாலம் அருகேயுள்ள கூவம் ஆற்றில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளியின் உடல் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அவர்  தற்கொலை செய்து கொண்டாரா, எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த விவரங்கள் தெரிய வில்லை.

You may have missed