லண்டனை பரபரப்பாக்கிய கொரில்லா தப்பியது எப்படி?

கடந்த 13-ஆம் தேதி லண்டன் மியூசியத்தில் இருந்து தப்பிய கும்புகா என்ற பெயர்கொண்ட கொரில்லா தப்பியது எப்படி என்ற தெளிவான செய்திகள் இப்போது வெளிவந்துள்ளன.

kumbuka

வழக்கமாக மாலை 5 மணிக்கு உணவுக்காக கூண்டு திறக்கப்படும் நேரத்தில் லாவகமாக தப்பியிருக்கிறது கொரில்லா. மிருகக்காட்சி சாலையின் காவலருக்கும் கும்புகா கொரில்லாவுக்கும் நல்ல நட்பு உண்டாம், அவர் கும்புகாவிடம் இதமாகப் பேசி அதை உள்ளே அழைத்துப்போய் உட்காரவைத்துவிட்டு இவர் வெளியேறியிருக்கிறார். அதற்கு பின்னர் எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்திருக்கிறார்.

அதன் பின்னர் மீண்டும் வெளியே வந்த கும்புகா ஒரு டின்னில் இருந்த ப்ளாக் கரண்ட் பழச்சாறை ருசி பார்த்திருக்கிறது. மியூசியத்தின் காவலர்கள் அனைவரும் சமயோஜிதமாக செயல்பட்டு கும்புகாவை மீண்டும் கூண்டுக்கு அனுப்பியிருக்கின்றனர். மற்றபடி கும்புகா தாள்பாழையோ, கூண்டையோ, ஜன்னல்களையோ உடைத்து சேதப்படுத்தவில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.