Random image

முதல்வர் கார் மீது பாதுகாப்பு வாகனம் மோதல்

சென்னை

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது பின்னால் வந்த பாதுகாப்பு வாகனம் மோதியது

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் இருந்து தனது இல்லத்துக்கு நேற்று மாலை காரில் திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.    அவருடைய கார் முன்பும் பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தன.   அவர் வரும் வழியில் எழிலகம் அருகே  காவலர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.    அப்போது காவலர் கையில் இருந்த வாக்கி டாக்கி தவறி கீழே விழுந்தது.

உடனடியாக அதை எடுக்க அந்தக் காவலர் முயன்றுள்ளார்.    அவர் மீது மோதாமல் இருக்க முன்னால் வந்த பாதுகாப்பு வாகனம் அவசர பிரேக் போட்டு நிறுத்தப் பட்டுளது.    அதை ஒட்டி அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்களும் நிறுத்தப் பட்டுள்ளன.    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றுக் கொண்டிருந்த காரின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

அப்போது முதல்வரின் காருக்கு பின்னால் வந்த பாதுகாப்பு வாகனம் முதல்வரின் கார் மீது மோதி உள்ளது.    இவ்வாறு மோதியதில் முதல்வரின் கார் சேதம் அடைந்துள்ளது.    யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.     காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.