டெல்லி:
பத்தான பணிகளை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கு ESI கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தை(ESI) பெறலாம்

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனை போன்ற சேர்க்கைகள் சேர்ப்பது குறித்து நாடளுமன்றம் கூடியபின்பு இறுதிமுடிவு எடுக்கப்படும்.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.4,200 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் உள்ள தொழிலாளர்களில் 30 சதவிகிதம் மட்டுமே குறைந்தபட்ச ஊதியம் பெறுகின்றனர். மற்றவர்களுக்கு அதை விட குறைவாகவே ஊதியம் கிடைக்கிறது. அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் (ESI) நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படு கிறது.
10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தை (ESI) பெறலாம்.
ஆபத்தான பணிகளை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கு (ESI) கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யும் அனைவரும் ஒரே ஊதியத்தை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.