டெல்லி:

கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துகொள்ள உதவும்  அடிபடைப் பொருள்களான N95, 2ply, 3ply முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் தடையின்றியும், அனைவரும் வாங்கும் விலையிலும் கிடைக்க மருத்துவமனைகள்  மற்றும் விற்பனையாளர்கள் உதவவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இதனை மீறுவதாக தங்களுக்கு புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

  

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான முகக் கவசம் கிருமிநாசினிகள் உள்ளிட்டவை கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் அவற்றின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே அதனை வாங்கப் பலரும் தயங்குகின்றனர்.

இதனை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, அத்தியவசிய பொருட்கள் சட்டம்(1955) பிரிவில் மேற்கூறிய பொருட்கள் ஜூன்30, 2020 வரை அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டும்,  இல்லாவிட்டால் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை அனைத்து மாநில அரசுகளும் கவனத்தில் கொண்டு தற்காப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேற்கூறிய அத்தியாவசியப் பொருட்களுக்காக நுகர்வோரிடம் விற்பனையாளர்கள் அதிகத் தொகை வசூலித்தால் அதுபற்றி 1800-11-4000 எனும் இலவச எண்ணிலும், consumerhelpline.gov.in. என்ற இணைய தளத்திலும் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த சட்டப் பிரிவின் கீழ் ஏழாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் எனவும் அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.