டில்லி:

நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளில்  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை  7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஜம்மு காஷ்மீரை தவிர மற்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது.

காலை  காலை 9 மணி நிலவரப்படி 10.27 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில், தற்போது 11 மணி  அளவில் பதிவாகி உள்ள வாக்குகள் விவரம் வெளியாகி உள்ளது.

மாநிலம் வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் 

பீகார் 13.95%

ஜம்மு-காஷ்மீர்  3.69%

மத்திய பிரதேசம் 18.65%

மகாராஷ்டிரா 8.15%

ஒடிசா 10 %

ராஜஸ்தான் – 15.08%

உத்தரபிரதேசம் – 17.69%

மேற்கு வங்கம் –  21.69%

ஜார்க்கண்ட் – 20.87%

இந்த 72 தொகுதிகளில் சுமார்  943 வேட்பாளர்கள்  களத்தில் உள்ளனர்.  வாக்குப் பதிவுக்காக சுமார் ஒரு லட்சத்து 40ஆயிரம்  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.  12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.