டில்லி:

நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளில்  வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது.

இன்று காலை  7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போது பகல் 1 மணி  அளவில் பதிவாகி உள்ள வாக்குகள் விவரம் வெளியாகி உள்ளது.

மாநிலம் வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் 

பீகார் 37.71%

ஜம்மு-காஷ்மீர் 6.66%

மத்திய பிரதேசம் 42.67%

மகாராஷ்டிரா 27.37%

ஒடிசா 35.62%

ராஜஸ்தான் – 43.61%,

உத்தரபிரதேசம் – 34%

மேற்கு வங்கம் – 51.79%

ஜார்க்கண்ட் – 44.90%.

இந்த 72 தொகுதிகளில் சுமார்  943 வேட்பாளர்கள்  களத்தில் உள்ளனர்.  வாக்குப் பதிவுக்காக சுமார் ஒரு லட்சத்து 40ஆயிரம்  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.  12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.