அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட 21.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செல்வாகுமென உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கை
தாக்கல் செய்துள்ளது.

அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் தனது தேர்தல் பரப்புரையின்போது கொடுத்த வக்குறுதிகளில் ஒன்று “ அகதிகள் வருவதைத் தடுக்க அமெரிக்க- மெக்சிகோ” எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும்” என்பதாகும். அவரது மதிப்பீட்டின்படி 12 பில்லியம் டாலர் செலவாகும் எனத் தேர்தலின்போது கூறிவந்தார். இப்போது பாதுகாப்புத்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கை தடுப்புச்சுவர் கட்ட அவரது கணிப்பைவிட இரண்டு மடங்கு செலவாகும் எனக் கூறியுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கெல்லி, எல்லையோர மாவட்ட ஷெரிப்களை சந்தித்து பேசியிருந்தார்.
பிமா கவுண்டி ஷெரீஃப் திரு. மார்க் நேப்பியர், அதிபர் டிரம்ப் உடனான கூட்டத்தின் முடிவில், “ சில பகுதிகளில் சுவர் கட்டமைப்புகள் மற்றும் சில இடங்களில் தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து கலந்தாலோசித்தோம். எனினும், களத்திற்கு சென்று ஆராய்ந்து கணக்கிட நிறைய நேரம் தேவைப்படும் ” என்று கூறினார்.
அதிபர் டிரம்ப் கூறுகையில், “ எல்லைச் சுவர் கட்ட $ 10 பில்லியன் மற்றும் $ 12 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் “ என்றார்.
பிலடெல்பியாவில் நடைபெற்ற காங்கிரஸ் குடியரசுக் கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மகொநெல் லின் மதிப்பீட்டின்படி செலவு $ 12 பில்லியன் முதல் $ 15 பில்லியன் வரை ஆகலாம் .

சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் அதிக நிதி மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதன் காரணம், சுவர் கட்டப்படவுள்ள பகுதியில் தனியார் உரிமையாளர்களிடமிருந்து நிலத்தினை கையகப்படுத்த செலவாகும் தொகையையும் சேர்த்தே திட்டமதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் திறம்பட பறிக்கப்பட்டது தங்கள் சொத்து உரிமையாளர்கள், அல்லது இரண்டு அதை வெட்டி ஒரு தசாப்தத்துக்கும் குறைவான நிறுவப்பட்ட தடைகளைக் காணப்படும்.

இந்தத் திட்ட அறிக்கையின்படி, மூன்று கட்டங்களாகச் சுவர் கட்டப்படவுள்ளது. கட்டுமானப் பணியின் முதல் கட்டமாகச் சான் டியாகோ, எல் பாஸொ, மற்றும் தெற்கு டெக்சாஸ் ரியோ தரப் பள்ளத்தாக்கில் 26 மைல்களை உள்ளடக்கிய பகுதியில் சுவர் கட்டும் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும்.

இரண்டாம் கட்டமாக 151 மைல்களை உள்ளடக்கிய அரிசோனா எல்லை சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில், மேலும் ளாரெடோ மற்றும் பிக் பெண்ட் பகுதியில் டெக்சாஸ் இதரப்பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இறுதி கட்டமாக, மீதமுள்ள பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டப்படும்.
அனைத்து, கட்டுமான பணிகள் நிறைவுற 3½ ஆண்டுகள்வரை ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

தடுப்புச் சுவர் கட்ட மெக்ஸிக்கோ நிதி தரும் எனக்கூறப்பட்டாலும், இந்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சி நிதி ஒதுக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கெல்லி விரைவில் இந்த ஆவணத்தைப் பகிரங்கமாக வெளியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.